�� *வருமான வரி தாக்கல் (Income Tax Return) செய்ய வருவோரின் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்*
�தாங்கள் ஒவ்வொரு நிதியாண்டில் (Financial Year) வருமான வரி தாக்கல் செய்ய கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் தெரிவிக்க வேண்டியவை �
� *நிதியாண்டு என்பது ஏப்ரல் முதல் நாளிலிருந்து மார்ச் இறுதி நாள் வரையாகும்*
1. தங்களின் முகவரியில் மாற்றம் இருப்பின் - Address Change
2. தங்களின் வியாபார விவரம் - Turnover detai
ls
3. தங்கள் பெயரில் உள்ள சொத்துகளிலிருந்து வரும் வருமான விவரம் (நிலம், கட்டிடம், வீடு) - Income from property
4. தங்கள் வங்கி கணக்குகளின் அந்த நிதியாண்டு பதிவு விவரம் (ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை) - Bank Account Statements
5. கடன் பற்றிய நிதியாண்டு பதிவு விவரம் - Loan Statements
6. புதியதாக வாங்கிய சொத்து விவரம் அல்லது விற்பனை விவரம் ( சொத்துக்கள் என்பது - நிலம், கட்டிடம், வாகனம், இயந்திரம், அறைகலன், தங்கம் மற்றும் பல) - Any new assets or Sold assets
7. வங்கி அல்லது தபால் நிலையத்தில் வைப்பு நிதி சேமிப்பு விவரம் - Fixed or Recurring Deposit
8. தங்களின் கடனாளிகள் மற்றும் கடனீந்தோர் விவரம் இருப்பின் - Sundry Debtors and Sundry Creditors
9. நிதியாண்டு இறுதி நாளன்று தங்கள் கைவசம் இருக்கும் சரக்கு விவரம் இருப்பின் - Closing Stock
10. ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு விவரம் இருப்பின் - Life Insurance and Medical Insurance
11. குழந்தைகளின் கல்வி செலவு விவரம் இருப்பின் - Children Education Expenses
12. தங்கள் குழந்தை பெயரில் செலுத்தி வரும் வைப்பு நிதி விவரம் (செல்வமகள் திட்டம்) - Investment on Children
13. நிதியாண்டில் தங்களுக்கு அல்லது தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் செலவினங்கள் (மருத்துவ செலவு & கல்யாண செலவு) - Medical Expenses or Marriage Expenses