26/12/2022
ராமன் ஒருவன் இருந்தானென்றோ அவன் இன்ஜினியர் படித்தானென்றோ ..
கலைஞர் மிகப்பெரிய அரசியல் ஞானி
..
இல்லாத பாலத்தை இருப்பதாக கூறி
அது நம்பிக்கையென முழங்கி .. ராமேஸ்வரம் தலைமன்னார் இடையே மிகப்பெரிய கடல்வழிபாதை அமைப்பதை எதிர்த்து இலங்கையை சுற்றி வரவேண்டிய நிலையை மாற்றிட வேண்டி, கலைஞரின் மிகப்பெரிய கனவை நிறைவேற்றிட முனைந்த போது ஊடகங்களும், சமய நம்பிக்கை கொண்டோரும் ஆடிய ஆட்டம் இன்று ஒன்றிய அரசே அப்படியொரு பாலமில்லை என நாடாளுமன்றத்தில் பதில் சொல்கிறது ...
காலம் தரும் பதில் என்றும் உண்மையைதான் சொல்லும் இல்லாததை இருப்பதென்று நம்புவது மடமை .. மூட நாற்றமடிக்கும் செயல்
கடவுள் மதம் நம்பிக்கை என்ற பெயரில் வளர்ச்சிக்கு தடையிடுவது அடுத்தகட்ட நகர்வை தடுப்பதாகும் ..
முன்னோக்கி செல்லல் தான் வளர்ச்சியே தவிர பின்னோக்கி இழுப்பதல்ல..
இந்திய ஒன்றியம் மதவெறியர்கள் கையிலிருந்து மீண்டாலே
வளர்ச்சி என்பது சாத்தியபடும்,..
மூளை கூட சுமையென எண்ணுவோர்
அறிவுக் கொண்டு சிந்திப்பது வீண் என்பர் .. மக்களை பக்தியில் மூழ்கடித்து
மடமையைச் சொல்லி மழுங்கடித்து உயர்வு தாழ்வென புத்தியில் ஏற்றி நாட்டை குட்டிசுவராக்குகின்றனர் ..
மக்களிடம் விழிப்புணர்வை வரும் வரை இவர்களின் ஆட்டம் மனிதகுல மேம்பாட்டிற்கு தடையாகவே இருக்கும் .
தொலைநோக்கும், சமநீதியும் எல்லோருக்கும் கல்வியும் சமஉரிமையும் கிடைக்க இந்திய ஒன்றியம் திராவிட மாடலை பின்பற்றவேண்டும் ...
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
மிகச் சிறந்த தலைவர் அவர் வழியில் நாடு முன்னேற தொடர்ந்து கரம் கோர்ப்போம் .
ஆலஞ்சியார்